விழியை விழி சந்தித்ததால்
உன்னை பற்றி சிந்தித்தேன்!
சந்திக்க ஆரம்பித்தவுடன்
சிந்திக்க ஆரம்பித்தேன்!
ஆரம்பங்கள் அனைதும்
அமர்கலமாக அமைந்தன!
அமைந்த எண்ணங்கள் யாவும்
என் உயிரோடு ஒன்றிவிட்டன!
இனணந்த எண்ணங்களை
என்னை விட்டு விலக்க முடியவில்லை!
காணும் பொருள் யாவும்
உன் எண்ண்ம்!
கேட்கும் திசையெங்கும் உன்
குரள் வளம்!
பார்க்கும் இடமெங்கும் உன்
பால் முகம்!
நினைக்கும் எண்ணங்கள் எங்கும்
உன் அன்பு உள்ளம்!
–இப்படியாக வர்ணித்தால் – அது
நடைமுறை
என் நிழல் உன் மீது
உன் உயிர் என் மீது
நீ நான் என்றால்
நான் நீ யாகத்தான்
இப்படி வர்ணித்தால்
அது மிகைப்படுதுதல்
அழகில் நீ நிலா
அறிவில் நீ கற்பூரம்
அன்பில் நீ தேன்
அரவனைப்பில் நீ தாய்
கருணையில் நீ தெய்வம்
இப்படி வர்ணித்தால்
அது கற்பனை!
எப்படியும் உன்னை வர்ணித்து
கற்பனை கவிதையாக
உன்னை காண எனக்கு
எண்ணம் இல்லை……..
என் உணர்வே!
நீ நீ தான்
நான் நான் தான்
இது தான் நடைமுறை
நீ “ம்” என்று சொன்னால்
சொர்கம் என் பக்கம்
நீ “வா” என்று சொன்னால்
வாழ்கை நம் பக்கம்
இது தான் நடைமுறை…..
வாதங்கள் பல நடக்கலாம்
ஆனால் நம் பிடிவாதம்
ஒத்துப்போவதால்
நாமும் ஒத்துப்போகிறோம்
இது தான் நடைமுறை….
எண்ணங்கள் பரிமாறப்படும் போது
உள்ளங்கள் அன்பில்
உறைகின்றன!
உன்னை நினைக்கும்
நொடிகள் யாவும்
இன்பமாய் இனிக்கின்றன…..
உன் வார்த்தைக்கு
வரிகள் அமைவதால்
என் உள்ளத்தில் ஊன்றிவிட்டாய்………..
சிரிப்பில் மயக்குகிறாயா?
அல்ல்து மயங்குகிறேனா?
பேச்சில் பிணைக்கிறாயா?
அல்லது பிணைகிறேனா?
வார்த்தையில் வதைக்கிறாயா?
அல்லது வதைகிறேனா?
வார்தைக்கு வாக்கியங்கள்
கவிதையாய் அமைவது கற்பனை தான்
ஆனால்
நீ உச்சரிக்கும் ஒவ்வொரு
சொல்லும் கவிதையாய் என்னை
தழுவுகிறதே?
எப்படி உயிரே………?
நீ நடக்கும் பாதையில்
பூவாய் மலர எனக்கு ஆசை!
நீ சிரிக்கும் சிரிப்பில்
சப்தமாய் ஒலிக்க ஆசை!
நீ பேசும் வார்த்தையில்
கவிதையாய் உருவாக ஆசை!
என்றும் உன் நினைவில்
நான் மட்டுமே பயணிக்க ஆசை!
முடியுமா என் உயிரே!
நடப்பவை எனக்கு முடியும் என்பதால்
உன் மீது பிரியம் கொண்டேன்
நான் உன்னை பிரிந்து செல்வதால்
ஏமாற்றம் எனக்கு மட்டுமே…….
என் நினைவுகள் உன்னில்
இருக்கும் வரை என் ஜீவனுக்கு
உயிர் இருக்கும்…….
நீ என்னை
மறக்கும் போது
என் ஜீவன் உயிர் மரிக்கும்!
இவை எழுத்தில்
வடித்த கற்பனை அல்ல
இது கவிதை
என்று சொல்ல
நான் கவிஞனல்ல!
நான் உன்னை
நேசித்த அன்பின்
இதய கீதங்கள்
உனக்கு சங்கீதமாய்
கேட்க சின்ன சின்ன
வார்த்தை வரிகள் தான்
இருப்பினும்
இவை என் உயிர் வரிகள்!
என்னவனே!
காத்திருப்பது சுகம் என்றால்
உனக்காக காத்திருக்கிறேன்!
பூத்திருப்பது அழகு என்றால்
உனக்காக பூத்திருக்கிறேன்!
நினைப்பது நிம்மதி என்றால்
உன்னை மட்டும் நினைத்திருக்கிறேன்!
மயங்குவது மகிழ்ச்சி என்றால்
உன்னை கண்டு மயங்குகிறேன்!
பாடுவது பரவசம் என்றால்
உனக்காக மட்டும் பாடுகிறேன்!
சிரிப்பது சிங்காரம் என்றால்
உனக்காக சிரிக்கிறேன்!
ஆனால்
நான் உன்னை
மறப்பது உனக்கு மட்டும்
மகிழ்ச்சி என்றால்
நான் அதற்க்காக
மரித்துப் போகிறேன்……………………!


